» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மேற்கு வங்கத்தின் 22-வது ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு: மம்தா பானர்ஜி வாழ்த்து!
வியாழன் 12, மார்ச் 2026 5:17:05 PM (IST)

மேற்கு வங்க மாநிலத்தின் 22-வது ஆளுநராக ஆர்.என். ரவி இன்று (வியாழக்கிழமை) முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.
கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற எளிமையான விழாவில், கல்கத்தா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டப்பேரவைத் தலைவர் (சபாநாயகர்) பிமன் பானர்ஜி, கொல்கத்தா மேயர் ஃபிர்ஹாத் ஹக்கிம், இடதுசாரி முன்னணித் தலைவர் பிமன் போஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அதேசமயம், பாஜக தரப்பிலிருந்து தலைவர்கள் யாரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாக ரீதியாகத் தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
கடந்த மார்ச் 5-ம் தேதி, மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆர்.என். ரவி அங்கு நியமிக்கப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என். ரவி, இதற்கு முன்னதாக நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றியுள்ளார்.
தமிழக ஆளுநர் பொறுப்பு மாற்றம்: 2021-ம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என். ரவி அவர்களுக்கும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது. தற்போது அவர் மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை வெற்றியைப் பரிசளிப்பார்கள்: கெஜ்ரிவால் நம்பிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:45:23 AM (IST)

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்: இந்தியாவில் சமையல் எரிவாயு பயன்பாடு 12.8% சரிவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 10:55:14 AM (IST)

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு – மத்திய அரசு கடும் கண்டனம்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:34:00 AM (IST)

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்
சனி 18, ஏப்ரல் 2026 5:27:06 PM (IST)

இண்டியா கூட்டணி எதிர்ப்பு எதிரொலி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி
சனி 18, ஏப்ரல் 2026 10:45:21 AM (IST)

தென் மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:36:14 PM (IST)

