» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!
ஞாயிறு 19, ஜூலை 2026 1:30:06 PM (IST)
வந்தே மாதரம் பாடலை அவமதித்தாலோ, இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை ,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல், நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை அண்மையில் வெளியிட்டது.
குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் இந்தப் பாடல் ஒலிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
அதன்படி, தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்பு நிகழ்விலும், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்விலும் ‘வந்தே மாதரம்’ பாடல் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒலிக்கப்பட்டது. இதற்கு, சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கும் தேசிய கெளரவம் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை, மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. முன்னதாக, இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், மசோதா விரைவில் தாக்கலாகிறது.
இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு, வந்தே மாதரம் பாடல் பாடுவதை வேண்டுமென்றே தடுப்பவர் அல்லது இடையூறு விளைவிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:40:58 PM (IST)

நல்ல நகைச்சுவை: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்துப் பிரகாஷ் ராஜ் விமர்சனம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:57:52 PM (IST)

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:44:13 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும்: நிர்மலா சீதாராமன்
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:26:12 PM (IST)

செங்கோட்டையில் 80-வது சுதந்திர தின விழா: முதன்முறையாக ஒலிக்கிறது வந்தே மாதரம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:53:50 AM (IST)

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்: தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சு; போர்க்களமான சட்டமன்ற வளாகம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 8:36:38 AM (IST)


