» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை-சென்னை வந்தேபாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: பயணிகள் வரவேற்பு

புதன் 27, நவம்பர் 2024 8:30:21 AM (IST)

நெல்லை-சென்னை வந்தேபாரத் ரயிலில் விரைவில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்திய ரயில்வே சார்பில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ரயில்களின் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பகுதி அதி விரைவு சொகுசு வந்தேபாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ரயில்கள் மணிக்கு சராசரியாக 80 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டாலும், நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளன. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நிறுத்தங்களால் பயணம் எளிதாகிறது.

இதற்கிடையே, மதுரை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லையில் இருந்து சென்னைக்கு செவ்வாய்க்கிழமை தவிர பிறநாட்களில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த சேவை தற்போது வரை தென்மாவட்ட மக்களிடையே பிரபலமாக உள்ளது. இந்த ரயில் (வ.எண்.20666) நெல்லையில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 7.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மதியம் 1.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.20665) சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

இந்த ரயிலில் 6 குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டிகளும், ஒரு எக்சிகியூடிவ் இருக்கை பெட்டியும் இணைக்கப்பட்டு உள்ளன. இருக்கை வசதி பெட்டிகளில் தலா 78 இருக்கைகளும், எக்சிகியூடிவ் பெட்டியில் 56 இருக்கைகளும் மட்டுமே உள்ளன. ஆனால், இந்த ரயிலில் எப்போதும் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகளவு உள்ளது. குறிப்பாக வார விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களில் காத்திருப்போர் பட்டியலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர். எனவே, பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து, இந்த ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகளை இணைக்க மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

அதாவது, வந்தேபாரத் ரயில் பெட்டிகளை பொறுத்தமட்டில் 8 பெட்டிகளை கொண்ட ரயில், 16 பெட்டிகளை கொண்ட ரயில் என பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் தற்போது நெல்லை-சென்னை வந்தேபாரத் சொகுசு ரயில் 8 பெட்டிகளை மட்டும் கொண்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வேயின் பரிந்துரையை தொடர்ந்து விரைவில் இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்ட ரயிலாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு தென்மாவட்ட பயணிகள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory