» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தீபாவளி புத்தாடை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்: கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல்!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 10:21:42 AM (IST)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை, பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள், பலகாரங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வாரவிடுமுறை தினமான நேற்று ஏராளமானவர்கள் குடும்பத்துடன் புத்தாடைகள் வாங்குவதற்காக ஜவுளிக்கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நெல்லை வடக்கு ரத வீதி, வண்ணார்பேட்டையில் தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் துணிகள் எடுக்க வந்த பெரும்பாலானவர்கள் மேம்பாலத்திற்கு கீழே மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தார்கள்.
மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வண்ணார்பேட்டை பகுதியில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி அனுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)


