» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஹஜ் பயணிகளுக்காக தற்காலிகமாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 6, நவம்பர் 2025 3:29:50 PM (IST)
ஹஜ் பயணிகளுக்காக தற்காலிகமாக சவூதியில் சேவையாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
2026-ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப, (Online) விண்ணப்பங்கள் செய்யலாம். தற்காலிக பணிக்காலம் 13.04.2026 முதல் 05.07.2026 வரை சுமார் இரண்டு மாத காலமாகும். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துணை இராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொதுநிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர். மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும்.
இப்பணிக்காக Online விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறை ஆகியன மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் (www.hajcommittee.gov.in) அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)

நெல்லையில் வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளி கைது
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:12:49 PM (IST)

தமிழ்நாட்டில் தலைமைக்காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : அன்புமணி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:31:37 PM (IST)

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:52:06 AM (IST)

நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் : தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஆய்வு!
வியாழன் 4, டிசம்பர் 2025 5:02:54 PM (IST)


