» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்: தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
வியாழன் 6, நவம்பர் 2025 4:06:52 PM (IST)

சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் தோற்றால் நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் சங்கரன்கோவில், திருநெல்வேலி சட்டசபை தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தி.மு.க. தெற்கு மண்டல பொறுப்பாளர் எம்.பி. கனிமொழியும் பங்கேற்றார்.
இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் நெல்லை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். நெல்லை தொகுதியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெறவில்லை என்றால் பதவிகள் பறிக்கப்படும் என்று நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.நெல்லை சட்டசபை தொகுதி உறுப்பினராக தற்போது பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)



வேகாத ஒடன் பருப்புNov 6, 2025 - 06:58:03 PM | Posted IP 104.2*****