» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 12:36:14 PM (IST)

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று (10.11.2025) தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு விவசாயிகளுக்கு பல்வேறு நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் நேரடி பாசனம் பெறும் 936.90 ஏக்கர், இதன் குளங்கள் வாயிலாக மறைமுக பாசனம் 4881.01 ஏக்கர் ஆக மொத்தம் 5780.91 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்காக 10.11.2025 முதல் 31.03.2026 முடிய நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்நீர்தேக்கத்தின் மூலம் நாங்குநேரி வட்டத்தில் 6 கிராமங்களும், இராதாபுரம் வட்டத்தில் 10 கிராமங்களும் ஆக மொத்தம் 16 கிராமங்கள் பயனடைந்து வருகின்றனர். நீரை சிக்கனமாக பயன்படுத்தவும் நீர் வினியோக பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், செயற்பொறியாளர் மணிகண்டராஜன், உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, களக்காடு நகராட்சி துணைத்தலைவர் பி.சி.ராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாஸ்கர், நாங்குநேரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், விவசாயிகள் உட்பட பலர் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுவில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி ஆசிரியர் கொலை : பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
புதன் 12, நவம்பர் 2025 5:50:21 PM (IST)

நெல்லை வருகை தந்த ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
புதன் 12, நவம்பர் 2025 4:33:40 PM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தர்மஅடி: பாளையங்கோட்டையில் பரபரப்பு!
புதன் 12, நவம்பர் 2025 8:43:51 AM (IST)

இன்ஜினியரை கொன்ற மனைவி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 12, நவம்பர் 2025 8:24:35 AM (IST)

நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: கனமழைக்கு வாய்ப்பு!
செவ்வாய் 11, நவம்பர் 2025 10:46:04 AM (IST)

போலீஸ் தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் அதிரடி கைது: 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:41:21 AM (IST)




