» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் விருது வழங்கிக் கௌரவித்தார்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழலை மேம்படுத்தப் பாடுபட்டவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். அதிக மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்தமைக்காகவும், தாமிரபரணி ஆற்றில் சேரும் துணிகளைத் தன்னார்வலராக அகற்றிச் சேவையாற்றியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது.
கங்கைகொண்டான் சிப்காட் ஏடிசி டயர்ஸ் (ATC Tires): நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தமைக்காகப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பாளையங்கோட்டை புனித இக்னேசியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி: பள்ளியில் நெகிழி (Plastic) பயன்பாட்டைத் தவிர்த்து, மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக விருது வழங்கப்பட்டது.
சிறந்த மருத்துவர்களுக்குக் கௌரவம்:
குடும்ப நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கருத்தடை, மயக்கவியல் மற்றும் குடும்ப நல ஆலோசனை ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் மருத்துவ அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024-2025-ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றிய மார்டின், சாந்தி சுசீந்திரன், ஹேனா விர்ஜினியா சாந்தி, முத்துலெட்சுமி, ரேவதி, மகேஷ்வரி ஆகிய மருத்துவர்களுக்குக் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியச் செயற்பொறியாளர் கிருஷ்ணபாபு, உதவிச் செயற்பொறியாளர் . ஜெயபிரியா, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மரு. லதா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சோ. ஜெயசித்ரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

