» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)
களக்காடு அருகே வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 31 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள அப்பர்குளத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பெருமாள் (45). இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பானுமதி, குழந்தைகளுடன் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மாரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் அப்பர்குளத்தில் உள்ள கணேஷ் பெருமாளின் வீடு பூட்டியே கிடந்தது.
வீடு பூட்டிக் கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள பீரோவை உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த 31 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.
நேற்று காலையில் கணேஷ் பெருமாள் வெளிநாட்டில் இருந்தவாறே, தனது வீட்டின் கண்காணிப்பு கேமரா பதிவுகளைச் செல்போன் மூலம் ஆய்வு செய்துள்ளார். அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து அவர் தனது மனைவி பானுமதிக்குத் தகவல் தெரிவித்தார்.
பானுமதி அளித்த புகாரின் பேரில், களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)


