» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)

காப்புக்காடு புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு தொல்காப்பியர் கழகத்தின் 34-ஆம் ஆண்டு விழா, கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் நடந்தது. விருது வழங்கும் இவ்விழாவிற்குத் தொல்காப்பியர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் பார்த்திவபுரம் பாபு தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் சுரேந்திரன் வரவேற்புரையற்றினார். தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் பி. கே. சிந்துகுமார் விருதுகளை வழங்கினார். தொல்காப்பியர் கழகத் தலைவர் முளங்குழி பா. லாசர் விருதாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருதும், வின்சென்ட்-க்கு 'தொல்காப்பியர்' விருதும், மார்த்தாண்டம் ஞானதீபம் கல்லூரித் தாளாளர் தோமஸ் ராஜ்-க்கு 'நற்கல்வி நாயகன்' விருதும், எழுத்தாளர் அரிகிருஷ்ணதாஸ்-க்கு 'நற்பணிச்செம்மல்' விருதும், த. ராதாகிருஷ்ணன்-க்கு 'கல்விச்செம்மல்' விருதும் வழங்கப்பட்டன.
பேராசிரியர் தே. பிரேம் ஆனந்த் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளைக் காப்புக்காடு தொல்காப்பியர் கழகத் தலைவர் முளங்குழி லாசர் தலைமையில் கழகத்தினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனிநபர் கடன், கல்விக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 5:46:43 PM (IST)

நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)

கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திங்கள் 8, ஜூன் 2026 4:16:17 PM (IST)

நெல்லை - தென்காசி வழித்தட எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 10:56:37 AM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
திங்கள் 8, ஜூன் 2026 10:37:14 AM (IST)

நெல்லை அருகே இருதரப்பு மோதலில் பெண் உள்பட 6 பேருக்குச் சரமாரி அரிவாள் வெட்டு: 7 பேர் கைது!
திங்கள் 8, ஜூன் 2026 8:57:56 AM (IST)


