» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காதல் மனைவியுடன் தகராறு: வாலிபர் தற்கொலை!
திங்கள் 6, ஜூலை 2026 10:45:25 AM (IST)
தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையார்கோவில் தெருவைச் சேர்ந்த பெனிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த டென்சிங் (29). இவரது மனைவி சுபிஷா (27). இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. டென்சிங்கிற்கு அடிக்கடி மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டு சண்டை போடுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று குடிபோதையில் இருந்த டென்சிங், சுபிஷாவை அடித்துத் துன்புறுத்தி வீட்டின் உள்ளே தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சுபிஷா அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த டென்சிங் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)



காதோல்Jul 7, 2026 - 04:27:35 PM | Posted IP 162.1*****