» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு: ஜூலை 15 முதல் இறுதி வாதங்கள் தொடக்கம்!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:44:24 AM (IST)
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் 9 போலீசார் தூக்குத் தண்டனை விவகாரத்தில் ஜூலை 15 முதல் நாள்தோறும் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ஆம் ஆண்டில் விசாரணை என்ற பெயரில் போலீசார் கடுமையாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.இந்தச் சம்பவம் குறித்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசார் சி.பி.ஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாருக்கும் தூக்குத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது.
இந்த 9 பேருக்குமான தூக்குத்தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்று சி.பி.ஐ சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல தூக்குத்தண்டனை பெற்ற 9 போலீசாரும் அந்தத் தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் வருகிற 15-ஆம் தேதி முதல் நாள்தோறும் பிற்பகலில் இறுதி விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்தனர். முதலாவதாக சி.பி.ஐ தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கலாம் என்றும், அடுத்ததாகத் தண்டனை விதிக்கப்பட்ட போலீசார் தரப்பினர் தங்களின் வாதங்களை இந்த ஐகோர்ட்டில் பதிவு செய்யலாம் என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)



மனிதன்Jul 8, 2026 - 10:06:28 AM | Posted IP 162.1*****