» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெண் கழுத்தறுத்துக் கொடூர கொலை; 8 பவுன் நகை கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!
செவ்வாய் 7, ஜூலை 2026 10:14:02 AM (IST)
விளாத்திகுளம் அருகே, நள்ளிரவில் பெண்ணை கழுத்தறுத்துக் கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 8 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் அடுத்துள்ள காடல்குடி காவல் எல்லைக்குட்பட்ட வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கலாவதி (62). இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் மூவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால், கண்ணனும் கலாவதியும் மட்டும் வடமலாபுரத்தில் உள்ள தங்களது வீட்டில் வசித்து வந்தனர்.
வழக்கம் போல் நேற்று இரவும் கலாவதி வீட்டின் உள்ளேயும், அவரது கணவர் கண்ணன் வீட்டின் வாசலிலும் படுத்து உறங்கியுள்ளனர். இன்று காலை சுமார் 6 மணி அளவில் கண்ணன் எழுந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கலாவதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கலாவதி கழுத்தில் அணிந்திருந்த, சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 பவுன் தாலிச் செயினை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து கண்ணன் அளித்த தகவலின் பேரில், புதூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காடல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இந்தத் துணிகரக் கொலையையும் கொள்ளையையும் அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் துறை மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களைச் சேகரித்தனர். சோதனையில், வீட்டிற்குள் சம்பந்தமில்லாத இருவரின் கைரேகைகள் பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய், வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கலாவதியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கொலை செய்த மர்ம நபர்களை தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் வடமலாபுரம் கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)



வயதானJul 7, 2026 - 04:30:24 PM | Posted IP 162.1*****