» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றியது : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 10:53:36 AM (IST)
இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப் பகலில் கொள்ளையடிப்பதை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்திருப்பதாவது, தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. பெங்களூருவின் மகாதேவபுராவில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பை திருடுவதற்கான திட்டமிட்ட சதி.எனது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, இந்த தீவிர மோசடியை அம்பலப்படுத்தியிருக்கிறார். ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியினர், நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாகச் சென்று கோரிக்கையை வலியுறுத்தவிருக்கிறோம். ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு திமுக தோளோடு தோள் நிற்கும்.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் கணினிகள் மூலம் படிக்கக்கூடிய முழுமையான வாக்காளர் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்,
அரசியல் ரீதியாக வாக்காளர் பட்டியல்களில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், மற்றும் நமது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட நாசவேலை குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக, இந்தியாவின் ஜனநாயகத்தை பட்டப் பகலில் கொள்ளையடிப்பதை நாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நிதியமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:24:32 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசன நேரம் மாற்றம்: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:22:37 PM (IST)



srinivasanAug 12, 2025 - 10:21:01 AM | Posted IP 104.2*****