» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி : உதயநிதி வாழ்த்து!

புதன் 12, நவம்பர் 2025 12:31:49 PM (IST)

நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் 100 அரசு ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory