» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்க டி20 லீக் : பயிற்சியாளராக கங்குலி நியமனம்!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 4:50:05 PM (IST)



தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்.லை போன்று தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது சீசன் வரும் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சீசனில் கிரஹாம் போர்டு நீக்கப்பட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜோனாதன் டிரோட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அணியின் செயல்திறனில் எதிர்பார்த்த அளவிலான முன்னேற்றம் இல்லாததால் தற்போது அவர், நீக்கப்பட்டு தலைமை பயிற்சியாளராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஷான் பொல்லாக் துணை பயிற்சியாளராக உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory