» சினிமா » செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம்!

செவ்வாய் 23, ஜூலை 2024 5:20:30 PM (IST)



திருச்செந்தூர் கோவிலில் காமெடி நடிகர் யோகிபாபு தனது குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகிபாபு நேற்று 39ஆவது பிறந்தநாளைமுன்னிட்டு தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்த பக்தர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

அது போல் அர்ச்சகர்களுடனும் செல்பி எடுத்தார். இப்படி யார் செல்பி கேட்டாலும் இல்லை என மறுக்காமல் அவர்களின் தோளின் மேல் கையை போட்டபடி போஸ் கொடுத்து எடுத்தார். அந்த வகையில் அவர் முருகனை தரிசனம் செய்துவிட்டு பிறகு வெளியே வந்தார். 

அப்போது கோவில் வளாகத்தில் இருந்த தூய்மை பணியாளர்கள் உங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டனர். உடனே அவர்களுடன் நின்று யோகிபாபு போட்டோ எடுத்துக் கொண்டார். அது போல் கோயில் பணியாளர்கள், கோயில் காவலாளிகள் உள்ளிட்டோருடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். யாரெல்லாம் கை கொடுத்தார்களோ அவர்களுக்கெல்லாம் கை கொடுத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு!

திங்கள் 9, செப்டம்பர் 2024 3:44:57 PM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory