» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நடிகையிடம் மன்னிப்பு கேட்காவிட்டால்.... சீமானுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
புதன் 24, செப்டம்பர் 2025 3:27:11 PM (IST)
நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும் என்று சீமானுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் (சீமான், விஜயலட்சுமி) பேசி முடிவுக்கு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த வழக்கில், நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் வரும் 24-ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமான் மீது விதிக்கப்பட்டிருந்த கைதுத் தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், சீமான் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை விஜயலட்சுமி தரப்பு முன்வைத்த வாதத்தில், "சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மன்னிப்பு கேட்கும் வகையில் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், "இந்த விவகாரத்தை எத்தனை நாள் இழுத்துக் கொண்டு செல்வது? ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இருவரும் மன்னிப்பு கேட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு வர வைக்க நேரிடும். இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 கோடி: மத்திய நிதி அமைச்சகம் தகவல்
திங்கள் 1, டிசம்பர் 2025 4:51:46 PM (IST)

தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க டிச.11 வரை அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 12:10:50 PM (IST)

நேஷனல் ஹெரால்டு பண மோசடி விவகாரம் : சோனியா, ராகுல் காந்தி மீது புதிய வழக்கு பதிவு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:47:46 AM (IST)

காசி-தமிழ் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி அழைப்பு
திங்கள் 1, டிசம்பர் 2025 8:40:41 AM (IST)

மழை, வெள்ளத்தால் பதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா
வெள்ளி 28, நவம்பர் 2025 5:05:40 PM (IST)

எஸ்ஐஆர் பணிச்சுமையால் 26 அதிகாரிகள் மரணம்: தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் பாய்ச்சல்
வெள்ளி 28, நவம்பர் 2025 4:15:36 PM (IST)




