» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமண்டல தேர்தல் மோதல்: தி.மு.க. நிர்வாகி கைது

செவ்வாய் 18, நவம்பர் 2025 8:40:57 AM (IST)

துாத்துக்குடி நாசரேத் சி.எஸ்.ஐ., திருமண்டல தேர்தல் விரோதம் காரணமாக, வாலிபரை வீடு புகுந்து தாக்கியதாக தி.மு.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., துணைச்செயலராக உள்ள ஜெயக்குமார் ரூபன் (53), துாத்துக்குடி,- நாசரேத் திருமண்டல நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். கடந்த 9ம் தேதி நடந்த மேல நட்டார்குளத்தில் உள்ள துாய யோவான் சர்ச் பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜெயக்குமார் ரூபன் உட்பட மூவர் ஒரு அணியாக போட்டியிட்டனர்.

ஜெயக்குமார் ரூபன் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், அவரது ஆதரவாளர் சகாயராஜ் தோல்வியடைந்தார். அதற்கு ஜான் ராஜபாண்டியன் தான் காரணம் எனக்கூறி, நவ., 12ம் தேதி அவரது வீட்டிற்குள் புகுந்து ஜெயக்குமார் ரூபன் தகராறு செய்து, ஜான் ராஜபாண்டியன் மகன் ஹில்டன் (19), என்பவரையும் தாக்கினாராம். இதில் காயமடைந்த ஹில்டன் புகாரில் செய்துங்கநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில், ஜெயக்குமார் ரூபனை கைது செய்த போலீசார், மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜெயக்குமார் ரூபன் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

மக்கள்Nov 18, 2025 - 10:36:15 AM | Posted IP 162.1*****

இனி வரும் தேர்தலில் தீமுக படுதோல்வி அடையும் உறுதி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory