» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
யாத்திரை பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து : 5பேர் பலி!
புதன் 17, ஜூலை 2024 12:03:56 PM (IST)
சமயபுரம் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றபோது சரக்கு வாகனம் மோதி 5 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்த சங்கீதா, லட்சுமி ஆகிய இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி என்பவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க வேண்டும்: நடிகர் சரத்குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:08:09 PM (IST)

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:31:40 PM (IST)

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 10:22:19 AM (IST)

தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:38:59 AM (IST)

வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; 4 பேர் கைது: இளம்பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:36:21 AM (IST)

நிதி தராவிட்டால் வரி செலுத்த முடியாது என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற சீமான் வலியுறுத்தல்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 4:38:43 PM (IST)
