» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அயலக மண்ணிலும் அரசு பணி தொடர்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

சனி 7, செப்டம்பர் 2024 5:13:19 PM (IST)



அயலக மண்ணிலும் அரசு பணி தொடர்கிறது' என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். பல நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து அரசுக் கோப்புகளுக்கு கையெழுத்து போடும் படத்தை முதல்வர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் ' அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் e-office வழியே பணி தொடர்கிறது எனக் கூறியுள்ளார்.

மற்றொரு சமூகவலைதளப்பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து, BNY Mellon உடன் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.,) ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory