» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்

சனி 19, ஜூலை 2025 10:32:48 AM (IST)

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்  கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.

மறைந்த திமுக தலைவர், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க. முத்து. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77.

சென்னை ஈச்சம்பாக்கத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில், பிள்ளையோ பிள்ளை படம் அவருடைய தந்தை கருணாநிதி கைவண்ணத்தில் உருவானது. கலைவாரிசாக மு.க. முத்துவை முன்னிறுத்த கருணாநிதி முயன்றார்.

ஒரு சில படங்களில் நடித்த அவர் பின்னர், பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. அரசியல் பணிகளிலும் விருப்பம் இல்லாமல் ஒதுங்கி கொண்டார். அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் செல்கிறார். மு.க. முத்துவின் மறைவை அவருடைய மனைவி சிவகாம சுந்தரி இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

இவருக்கு எம்.கே.எம். அறிவுநிதி என்றொரு மகன் இருக்கிறார். இதனையடுத்து, தி.மு.க.வில் இன்று முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory