» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!

சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)

2025-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி,  தமிழ்நாடு துணை முதலமைச்சர்  பொறுப்பேற்றவுடன் "தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 

2025-26ம் ஆண்டில் நடத்தப்படவிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 37 விளையாட்டுக்கள் 53 வகைகளில்  கன்னியாகுமரி மாவட்ட, திருநெல்வேலி மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 22.08.2025 முதல் 12.09.2025 வரை  நடத்தப்பட உள்ளது.

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000/- மும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.75,000/- மும், மூன்றாம் பரிசாக ரூ.50,000/- மும் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75,000/- மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50,000/-மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25,000/-மும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த பள்ளிப் பிரிவிற்கு (19 வயதிற்குட்பட்டவர்களுக்கு அதாவது 6 முதல் 12 வகுப்பு வரை மட்டும், 01.01.2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்), கல்லூரிப் பிரிவுவிற்குட்பட்டவர்களுக்கு அதாவது 25 வயதிற்குட்பட்டவர்கள் 01.07.2000 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்), பொதுப்பிரிவு (15 வயது முதல் 35 வயது வரை) 15 வயது எனில் (01.01.2010 அன்றோ அல்லது அதற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்), 35 வயது எனில் (01.01.1990 அன்று அல்லது அதற்கு பின் பிறந்திருக்க வேண்டும்). அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க 17.07.2025 முதல் http://sdat.tn.gov.in (ம) http://cmtrophy.sdat.in என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 16.08.2025 மாலை 6.00 மணி ஆகும். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை  நேரிலோ (அ) 04652 262060 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory