» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
சனி 19, ஜூலை 2025 5:29:48 PM (IST)
பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், தி.மு.க. 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் அருகே பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த 8-ம் தேதி தொடங்கி காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அந்த கோரிக்கைகள் தமிழக முதல்-அமைச்சரிடம் கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்யப்படும். விரைவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வரும் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்: 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
ஞாயிறு 20, ஜூலை 2025 9:52:54 AM (IST)

போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர் மரண வழக்கு: வேறு விசாரணை அதிகாரி நியமிக்க உத்தரவு!
சனி 19, ஜூலை 2025 9:15:54 PM (IST)

மாணவிகளின் பாதுகாப்பில் திமுக அரசு அலட்சியம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சனி 19, ஜூலை 2025 5:34:31 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 19, ஜூலை 2025 5:28:50 PM (IST)

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
சனி 19, ஜூலை 2025 12:48:22 PM (IST)

கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!!
சனி 19, ஜூலை 2025 12:08:33 PM (IST)
