» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளி 14, நவம்பர் 2025 8:22:34 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடியில் கடந்த 2023ம் ஆண்டு  தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் முருகன் (45/2023) என்பவரை முன்விரோதம் காரணமாக மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான இசக்கிமுத்து மகன் கருப்பசாமி (எ) கருப்பன் (29/2025), சுப்பையா மகன் ராஜசேகர் (எ) ராஜா  (35/2025), (மற்றொரு) இசக்கிமுத்து மகன் கணேசன் (42/2025, கணேசனின் மகன் முத்துசெல்வம் (23/2025) ஆகியோர் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் வடபாகம் காவல் நிலைய போலீசார் மேற்படி 4பேரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி  பிரீத்தா  இன்று (14.11.2025) மேற்படி எதிரிகள் கருப்பசாமி (எ) கருப்பன், ராஜசேகர் (எ) ராஜா, கணேசன் மற்றும் கணேசனின் மகன் முத்துசெல்வம் ஆகிய நான்கு எதிரிகளுக்கு தலா ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்  சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர்  சிலம்பரசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory