» சினிமா » செய்திகள்
நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!
செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 10:26:26 AM (IST)
பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆக. 27) காலமானார்.
யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் அறிமுகமான இவர், கோமாளி, நட்பே துணை, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து வெள்ளித்திரையிலும் பிரபலமானார்.தீவீர குடிபழக்கத்துக்கு ஆளான இவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிஜிலி ரமேஷ் இன்று காலமானார். நடிகர் பிஜிலி ரமேஷின் இறுதிசடங்குகள் இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

சபரிமலை கோவிலில் தங்கம் அபகரிப்பு வழக்கு: நடிகர் ஜெயராமை கைது செய்ய முடிவு!
வெள்ளி 28, நவம்பர் 2025 5:25:35 PM (IST)

பிரபல நடிகையுடன் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஸ்ரீகாந்த் திருமணம்!
வியாழன் 27, நவம்பர் 2025 4:43:43 PM (IST)

