» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பணமோசடி வழக்கு : சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு

திங்கள் 4, டிசம்பர் 2023 4:52:09 PM (IST)

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை அடுத்த விசாரணை வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கு தொடர்பாக கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.  அதையடுத்து அவருக்கு உடல்நலக் குறைவு காரணமாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதனைப் பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் வழக்கு நவ.24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதனை விசாரிக்கும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா அன்று ஆஜராகாததால் நீதிபதி பெலா எம்.திரிவேதி அமர்வு இந்த வழக்கை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. சத்யேந்தர் ஜெயின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிங்வி, இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்து, அதுவரை சத்யேந்தர் ஜெயினின் இடைக்கால ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory