» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: அமித்ஷா அறிவிப்பு!

செவ்வாய் 30, ஜனவரி 2024 10:57:48 AM (IST)

நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சிமி மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் ஈடுபட்டதற்காக இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும், பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களிலும் சிமி அமைப்பு ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிமி மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது முதன்முதலில் சிமி இயக்கம் தடை செய்யப்பட்டது, அதன் பிறகு ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2014ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும் சிமி அமைப்பின் மீது ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory