» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளத்தில் பாஜக தலைவர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை!

செவ்வாய் 30, ஜனவரி 2024 12:16:52 PM (IST)



கேரள மாநில பாஜக தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் கைதான 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் ஆலப்புழா நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

கேரளா மாநிலம் ஆழப்புழாவை சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாசன். வழக்கறிஞரான இவர் பாஜகவில் செயல்பட்டு வந்தார். பாகவின் ஓபிசி அணியின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி ரஞ்சித் சீனிவாசன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஆழப்புழாவில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த நபர்கள் அவரை கொடூரமாக கொலை செய்தனர். வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்முன்னே இந்த கொடூர கொலை என்பது நடந்தது. 

இந்த சம்பவம் கேரளாவை உலுக்கியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ரஞ்சித் சீனிவாசன் கொலையானது எஸ்டிபிஐவை சேர்ந்த கேஎஸ் ஷான் என்பவர் கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில் நடந்தது. இதனால் ரஞ்சித் சீனிவாசன் கொலைக்கும், கேஎஸ் ஷான் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த விசாரணையின்போது ரஞ்சித் சீனிவாசன் கொலை தொடர்பாக நிஜாம், அஜ்மல், அனூப், எம்டி அஸ்லாம், சலாம், அப்துல் கலாம், சஃபாருதீன், முன்ஷாத், ஜசீப், நவாஸ், ஷெமீர், நசீர், ஜாகீர் உசேன், ஷாஜி மற்றும் ஷாம்னாஸ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கு என்பது ஆழப்புழா மாவட்டம் மாவெலிகாராவில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அதில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைதான 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்தியாவை பொறுத்தமட்டில் தூக்கு தண்டனை என்பது அனைத்து வழக்குகளுக்கும் வழங்கப்படுவது இல்லை. சில வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என்பது வழங்கப்படும். இத்தகைய சூழலில் தான் ஒரே வழக்கில் 15 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கி கேரளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு என்பது அரிதானதாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்திய வரலாற்றில் ஒரே வழக்கில் அதிகமானவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு என்றால் அது அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தான். மொத்தம் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு அடுத்தப்படியாக முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பூவிந்தவல்லி தடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 15 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் 3வது பெரிய மரண தண்டனை வழக்காக பார்க்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து

இந்தியன்Jan 30, 2024 - 12:41:31 PM | Posted IP 162.1*****

ஜெய் ஹிந்த்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory