» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் ஹிந்து கோயில்: அதிபருக்கு பிரதமர் நன்றி!

புதன் 14, பிப்ரவரி 2024 10:48:59 AM (IST)



ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் ஹிந்து கோயில் சாத்தியமானதற்கு ஷேக் முகமது பின் சயீத் ஆதரவே காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் மகாத்மா மந்திரில் நடைபெற்ற குஜராத் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டதற்கு நன்றி. என் அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்துகொண்டதன் மூலம் மாநாட்டின் மதிப்பு உலகளவில் பன்மடங்கு உயர்ந்தது.

எனக்கு உற்சாகமான வரவேற்பளித்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 7 மாதங்களில் நாங்கள் 5 முறை சந்தித்துள்ளோம். இது அரிதாக நடக்கக்கூடியது. நானும் இங்கு 7 முறை வருவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளேன்.

அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேறிய விதம், ஒவ்வொரு துறையிலும் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒரு நட்பு நீடிக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் ஹிந்து கோயில் கட்ட மிக முக்கிய காரணமாக இருந்ததற்கு நன்றி. உங்கள் (ஷேக் முகமது பின் சயீத்) ஆதரவு இல்லாமல் கோயில் கட்டுமானம் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இன்று மாலை அபுதாபி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் ஷேக் முகமது பின் சயீத் நேரில் சென்று வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பிரதமருக்கு ராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மோடி சென்றுள்ள நிலையில் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிபர் ஷேக் முகமது பின் சயீத், யுபிஐ சேவையை பிரதமர் மோடி முன்னிலையில் தொடக்கிவைத்தார்.


மக்கள் கருத்து

JAIHINDFeb 14, 2024 - 04:27:38 PM | Posted IP 172.7*****

வாழ்த்துக்கள். GREAT WORK BY UAE.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory