» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகும் எல்.முருகன் : மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வாகிறார்!

புதன் 14, பிப்ரவரி 2024 12:27:02 PM (IST)

மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.

வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய நாளை(பிப்.15) கடைசி நாளாகும்.இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகனை பாஜக அறிவித்துள்ளது.

மேலும், ஒடிஸா மாநிலத்துக்கான மாநிலங்களவை பதவிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் போட்டியிடுகிறார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த 2021-ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்துகான மாநிலங்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்நிலையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory