» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ககன்யான் திட்டத்தில் விண்வெளி பயணம் : வீரர்களை அறிவித்தார் பிரதமர் மோடி!

புதன் 28, பிப்ரவரி 2024 8:18:20 AM (IST)



ககன்யான்' திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார். 

இதன்படி விண்வெளி செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசாந்த், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 வீரர்களுக்கு மிஷன் லோகோ பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார்.

இதில் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 1982-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி சென்னையில் பிறந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பட்டம் பெற்ற அஜித் கிருஷ்ணன், விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் (Sword of Honor) ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

அஜித் கிருஷ்ணன் 21 ஜூன் 2003 அன்று இந்திய விமானப்படையின் போர்ப் பிரிவில் நியமிக்கப்பட்டார். பயிற்சி விமானிகளுக்கான ஆலோசகராகவும் உள்ளார். அதோடு இந்திய விமானப்படையின் புதிய விமானத்திற்கான சோதனை பைலட்டாகவும் இருக்கிறார்.

வெலிங்டனில் உள்ள டிபென்ஸ் ஸ்டாப் சர்வீசஸ் கல்லூரியில் (டி.எஸ்.எஸ்.சி.) அஜித் கிருஷ்ணன் பயிற்சி பெற்றுள்ளார். இவர் 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர். சுகோய்-30 எம்.கே.ஐ., மிக்-21, மிக்-29, ஜேகுவார், டார்னியர், ஏ.என்.-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை இயக்கிய அனுபவம் இவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory