» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி போட்டி!

புதன் 28, பிப்ரவரி 2024 12:35:30 PM (IST)

கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதில் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 15 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இதனால் அந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. இதுபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள இடது ஜனநாயக முன்னணியும் இம்முறை அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடுகிறார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான இவர் முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

கேரளத்தில் பிறந்த இவர், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆவார். இதுபோல் திருவனந்தபுரம் தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மூத்ததலைவர் பன்னியன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் திரிச்சூர் தொகுதியிலும் சி.ஏ. அருண்குமார் மாவேலிக்கரா தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் வெளியிட்டார். அவர் கூறும்போது, "இடதுசாரி கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளன” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory