» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை 5 ஆண்டுகள் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

புதன் 28, பிப்ரவரி 2024 12:42:42 PM (IST)

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்த அமைப்பை கடந்த 2019-ம் ஆண்டு அரசு தடை செய்தது. இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி, தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory