» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

வியாழன் 29, பிப்ரவரி 2024 11:45:44 AM (IST)

மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசம் திண்டோரி மாவட்டம் ஷாப்புரா காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் திருமணத்துக்கு சென்றுவிட்டு 35-க்கும் மேற்பட்டோர் வேனில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தலைகீழாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பலியாகினர்.

மேலும், காயமடைந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், நிதியுதவியாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory