» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: ரூ.1,960.50 ஆக விற்பனை

வெள்ளி 1, மார்ச் 2024 12:46:08 PM (IST)

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்துள்ளது. அதன்படி, 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,960.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை மீண்டும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.23.50 உயா்ந்து, ரூ.1,960.50-க்கு விற்பனையாகிறது. இதனால் உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனினும், வீடுகளில் பயன்படுத்தக் கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory