» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

வியாழன் 18, ஏப்ரல் 2024 4:30:33 PM (IST)

பிட்காயின் மோசடி விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபு தேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். மேலும் குஷி படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா என்பவரைக் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிஎம்எல்ஏ 2002 சட்டத்தின்படி சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் மும்பை- ஜுஹு பகுதியில் உள்ள வீடு, புணேவில் இருக்கும் வீடுகளும் அடங்கும்.

2017இல் மாதம் மாதம் 10 சதவிகிதம் லாபம் பெறலாம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக்கூறி பொதுமக்களிடம் இருந்து பிட்காயினியில் ரூ.6,600 கோடியை மோசடி செய்துள்ளனர். உக்ரைனில் பிட்காயின் மைனிங் அமைப்பதற்காக அமித் பரத்வாஜ் என்பவரிடம் இருந்து ராஜ் குந்த்ரா 285 பிட்காயின் வாங்கியுள்ளார். இந்தத் திட்டம் இன்னும் அமலுக்கு வராமல் இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.150 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 385 பிட்காயினை ராஜ் குந்த்ரா தற்போதுவரை அனுபவித்து வந்துள்ளார்.

முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் தலைமறைவாகவே இருக்கிறார்கள் எனவும் இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory