» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைப்பு!

வெள்ளி 9, மே 2025 12:49:44 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப் போட்டி மே.25ஆம் தேதி நடைபெறவிருந்தது. 

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தினால் போட்டிகளை காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.”இந்தியாவில் போர்ப் பதற்றம் இருக்கும்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது நல்லதல்ல” என பிசிசிஐ அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கூறியுள்ளார். 

இதனிடையே நேற்றிரவு (மே.8) தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். கிரிக்கெட் வீரர்கள், தொழில்நுட்ப குழிவினர்கள் பாதுகாப்பாக விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் தில்லிக்கு பாதுகாப்பாக அழைத்துவர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடைபெறும் தேதி குறித்த முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory