» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து: 6 பேர் உயிரிழப்பு!
சனி 24, மே 2025 5:47:07 PM (IST)
ஆந்திராவில் லாரி - கார் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம், பாபட்டலா மாவட்டம் ஸ்டுவர்ட்டுபுரத்தை சேர்ந்த 8 பேர் காரில் நந்தியாலா மாவட்டம் மகாநதியில் சாமி தரிசனம் செய்தனர். நேற்று தரிசனம் முடிந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பிரகாசம் மாவட்டம் தடி செர்லா மோட்டு என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)
