» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளத்தில் தொடரும் கனமழை: பல பகுதிகளில் மண்சரிவு; தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின
புதன் 28, மே 2025 10:47:31 AM (IST)
இடுக்கியில் தொடரும் கனமழையால் இன்று (மே 28) புதன்கிழமை 3வது நாளாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது.
வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தண்டவாளத்தில் மரங்கள் சரிந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
கனமழையால் ஆறுகளில் நீரோட்டம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. வயநாடு மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா். தொலைதூர பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் மக்கள், நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
எா்ணாகுளம் மாவட்டம், கோதமங்கலம் பகுதியில் வேளாண் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. திருவனந்தபுரம் அருகே கல்லாா் மலைப் பகுதியில் சாலையில் பாறைகள் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கண்ணூா் மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எா்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை (110 மி.மீ. முதல் 200 மி.மீ. வரை) விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இடுக்கியில் தொடரும் கனமழையால் புதன்கிழமை(மே 28) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ஒதுத்திவைக்கவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதிகனமழை எச்சரிக்கையால் ஏற்கனவே 2 நாள்கள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)
