» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கன்னடத்தின் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது : கமலுக்கு கர்நாடகா முதல்வர் கண்டனம்!
புதன் 28, மே 2025 4:21:16 PM (IST)

தமிழ் மொழியில் இருந்து கன்னடம் தோன்றியதாக பேசிய கமல்ஹாசனை கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல் - மணிரத்னம் - சிம்பு - ஏ.ஆர் ரஹ்மான் காம்போவில் உருவான தக் லைஃப் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. ஆனால் அந்த கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாதளவுக்கு கமல் பிரச்னையில் சிக்கியுள்ளார்.
தக் லைஃப் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பாராட்டி பேசிய கமல்ஹாசன், "உங்கள் பாஷை தமிழில் இருந்து வந்தது." என்று கூறியிருந்தார். தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்று கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கன்னட அமைப்புகள் கமலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரின் போஸ்டர்களை கிழித்து வருகின்றனர்.
இதற்கு அரசியல் கட்சிகளும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில், "கன்னட மொழிக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. சிறுமையான கமல்ஹாசனுக்கு அது தெரியாது." என்று விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிரும், புதிருமாக உள்ள காங்கிரஸ், பாஜக ஒரே நிலைப்பாட்டில் உள்ளன.
கமல்ஹாசனுக்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறுகையில், "கமல்ஹாசனின் அனைத்துப் படங்களையும் கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். இல்லையென்றால் அவர் மன நோயாளி போல் இப்படி நடித்துக் கொண்டே இருப்பார்." என்று கூறியுள்ளார்.
கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா, "கலைத்துறையில் உள்ள நடிகர்கள் அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். கமல் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டே கன்னட மொழிக்கும், கன்னடர்களுக்கும் அவமதிப்பு ஏற்படுத்தியுள்ளார்." என்று கூறியுள்ளார்.
கன்னட ஆதரவு அமைப்பினர் பலரும், "கமலின் கருத்து தேவையில்லாத ஒன்று. அவர் உடனடியாக இதுகுறித்து விளக்கமளித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடையும்." என்று எச்சரித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் : பிரதமர் மோடி வாழ்த்து
புதன் 25, ஜூன் 2025 5:17:32 PM (IST)
