» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!
வியாழன் 29, மே 2025 12:48:01 PM (IST)
ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டுக் கூட்டத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.

ஆளுங்கட்சி சார்பில் கடப்பாவில் நடைபெறும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, "உலகில் பல நாடுகள் டிஜிட்டல் கரன்சிக்கு மாறியுள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கான நன்கொடை வசூல் கூட டிஜிட்டல் முறையில் தான் பெறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தின் மூலம் இன்று நான் ஒன்றை வலியுறுத்துகிறேன். ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்.
வாக்குக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் அரசியலில் இல்லை. மக்கள் பணியை திறம்பட செய்வதே நமது இலக்காக இருக்க வேண்டும். அதை நாம் திறம்பட செய்தாலே மக்கள் நமக்கு வாக்கு செலுத்துவார்கள். உங்கள் பலமான கர ஒலி மூலம் பெரிய மதிப்பு கொண்ட நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான ஆதரவை வெளிக்காட்டுங்கள். அப்போது தான் தேசத்தில் ஊழலை ஒழிக்க முடியும்” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)
