» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமல்ல: ராகுலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!!
வியாழன் 5, ஜூன் 2025 12:48:38 PM (IST)
ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்து பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது என, ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த எம்.பி., - எம்.எல்.ஏ.க்களுக்கான லக்னோ சிறப்பு நீதிமன்றம், ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது: மக்கள், பாரத் ஒற்றுமை யாத்திரை பற்றி கேட்பர்; அசோக் கெலாட், சச்சின் பைலட் பற்றி கூட கேட்பர். ஆனால், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறித்தோ, நம் ராணுவத்தினர் தாக்கப்பட்டது குறித்தோ கேள்வி எழுப்ப மாட்டார்கள். பின், ஏன் இந்த பேச்சு.
இந்திய அரசியலமைப்பின் 19 - 1ன் ஏ பிரிவின் கீழ் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டாலும், அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்தவொரு தனி நபரையோ அல்லது நம் ராணுவத்தையோ அவதுாறு செய்யும் உரிமையை, இந்த பிரிவு வழங்காது.
ராணுவம் அல்லது ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது. ராகுலின் கருத்துகள், நம் ராணுவத்தினரையும், அதை சார்ந்தவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் உள்ளன. ஆகையால், லக்னோ சிறப்பு நீதிமன்ற சம்மனுக்கு எதிரான ராகுலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
ஆனந்த்Jun 6, 2025 - 11:09:59 AM | Posted IP 104.2*****
வெளிநாட்டு ஆள் இந்திய எம் பி ஆக முடியாது என்ன முட்டாள் தனம் கூமுட்டை
இவன்Jun 5, 2025 - 06:56:18 PM | Posted IP 172.7*****
வெளிநாட்டுக்கார பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய கான் முட்டாள் குடும்பம் தான் காங்கிரஸ்
கந்தசாமிJun 5, 2025 - 03:32:48 PM | Posted IP 104.2*****
இந்திய இராணுவதின் சிந்தூர் நடவடிக்கையின் இழப்பு எவ்வளவு என்று ஏன் அரசாங்கம் தெரிவிக்க மறுக்கிறது
மேலும் தொடரும் செய்திகள்

தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து: மராஷ்டிர முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 1, ஜூலை 2025 12:20:39 PM (IST)

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:46:07 PM (IST)

கொல்கத்தாவில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு: சட்டக்கல்லூரி காவலாளி கைது
ஞாயிறு 29, ஜூன் 2025 12:37:13 PM (IST)

வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கடும் கண்டனம்
வெள்ளி 27, ஜூன் 2025 11:01:13 AM (IST)

மொழி அடிப்படையில் மக்களை பிரிக்க பாஜக முயற்சிக்கிறது : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு!
வியாழன் 26, ஜூன் 2025 5:21:14 PM (IST)

பாராசிட்டமால் 650 உள்பட 14 வகை மாத்திரை, மருந்துகளுக்கு கர்நாடக அரசு தடை!
வியாழன் 26, ஜூன் 2025 3:32:39 PM (IST)

மர்ம குடும்பம்Jun 10, 2025 - 05:13:34 PM | Posted IP 104.2*****