» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விமான விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
வெள்ளி 13, ஜூன் 2025 11:00:47 AM (IST)
அகமதாபாத் விமான விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "1950களில் நடந்த ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் மிட் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர் அதே தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் கோருகிறேன்.அப்போதுதான் விபத்து குறித்து சுயாதீனமான மற்றும் நியாயமான விசாரணை நடைபெறும். மோடியும் அவரது குழுவினரும் இவ்வளவு காலமாக செய்து வருவது வெறும் பிரச்சாரம் மட்டுமே. இது முடிவுக்கு வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்து ஏர் இந்தியா ஏஐ 171 போயிங் விமானம் விபத்துகுள்ளானது. இதில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)


