» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவிதா!
புதன் 3, செப்டம்பர் 2025 5:25:09 PM (IST)
தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவியை கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, காலேஸ்வரம் பாசனத் திட்டத்தில் முறைகேடு செய்து தனது தந்தை கே.சந்திரசேகா் ராவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக நெருங்கிய உறவினா்களான டி.ஹரீஷ் ராவ் மற்றும் ஜே.சந்தோஷ் குமாா் ஆகியோா் மீது கவிதா குற்றஞ்சாட்டினாா். இவா்கள் இருவரின் பின்னணியில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய சந்திரசேகா் ராவ் முடிவெடுத்ததாக பொதுச் செயலா்களான டி.ரவீந்தா் ராவ், சோமா பரத்குமாா் ஆகியோா் அறிவித்தனா். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா பேசியதாவது: கே. சந்திரசேகர் ராவும் கே.டி. ராமா ராவும் என் குடும்பத்தினர். நாங்கள் ரத்தத்தால் பிணைக்கப்பட்டவர்கள்.
கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாலோ, பதவிகளை இழந்தாலோ இந்த பிணைப்பு முறிந்துவிடக் கூடாது. நான் ஒருபோதும் தெலுங்கானா மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. ஆனால், சிலர் தங்களின் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் சிதைந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்ற என் தந்தைக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான நோக்கங்களைப் பார்க்குமாறு என் தந்தையிடம் கேட்டுக் கொள்கிரேன். பிஆர்எஸ் குடும்பத்தை சுயநலத்துக்காக உடைத்துவிட்டார்கள். நான் பிஆர்எஸ் கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து விலகுகிறேன். எனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், பினராயி விஜயன், ராகுல் காந்தி வாழ்த்து!
புதன் 17, செப்டம்பர் 2025 11:28:11 AM (IST)

டேராடூனில் மேகவெடிப்பால் கனமழை : வெள்ளத்தில் சிக்கிய 200 மாணவர்கள் மீட்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:49:09 PM (IST)

ஆதார் திருத்தம் கட்டணங்கள் உயர்வு : அக்.1 ஆம் தேதி முதல் அமல்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:25:39 PM (IST)

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:45:42 AM (IST)

ஒப்பந்த செவிலியர்களின் உழைப்பை தமிழக அரசு சுரண்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம் !
திங்கள் 15, செப்டம்பர் 2025 4:56:10 PM (IST)

ஜிஎஸ்டி 2.0 மூலம் வரி குறையும் பொருட்கள் பட்டியல் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:47:56 AM (IST)
