» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!

திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)

நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும் என்பதால் மத்திய அமைச்சர் பதவி​யில் இருந்து விலக விரும்புகிறேன் என்று சுரேஷ் கோபி கருத்து தெரி​வித்​துள்ளார்.

கேரள மாநிலம் கண்​ணூரில் நேற்று நடை​பெற்ற பாஜக விழா​வில் சதானந்​தன் மாஸ்​டர் பங்​கேற்​றார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய பெட்​ரோலிய துறை இணை அமைச்​சர் சுரேஷ் கோபி தொண்​டர்​களிடம் பேசி​ய​தாவது: நான் ஒருபோதும் அமைச்​ச​ராக ஆசைப்​பட்​ட​தில்​லை. அமைச்​ச​ரான பிறகு எனது சினிமா வரு​மானம் கணிச​மான அளவில் குறைந்​துள்​ளது. 

எனவே நான் நிறைய சம்பாதிக்க வேண்டும். பலருக்கு உதவ வேண்டும். எனவே நான் அமைச்​சர் பதவி​யில் இருந்து விலக விருப்​பம் தெரி​வித்​துள்​ளேன்.அமைச்​சர் பதவி​யில் இருந்து என்னை நீக்​கிய பிறகு சதானந்​தன் மாஸ்டரை அமைச்​ச​ராக்க வேண்​டும் என்று நான் இங்கே மனதா​ரக் கூறுகிறேன். இது கேரள அரசி​யல் வரலாற்​றில் ஒரு புதிய அத்​தி​யாய​மாக மாறும் என்று நம்​பு​கிறேன். இவ்​வாறு அவர் பேசி​னார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory