» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடிவா? மத்திய அரசு விளக்கம் - ராகுல் விமர்சனம்!

வியாழன் 16, அக்டோபர் 2025 3:37:12 PM (IST)

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி தன்னிடம் உறுதியளித்திருப்பதாக டிரம்ப் வெளியிட்ட நிலையில், டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார் என்று ராகுல் விமர்சித்துள்ளார். 

ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக மோடி தன்னிடம் உறுதியளித்திருப்பதாக டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தெரிவித்திருப்பதாவது: ”கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது. நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. நமது இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தை கொண்டு முழுமையாக வழிநடத்தப்படுகின்றன.

நிலையான எரிசக்தி விலை மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்தல் ஆகியவை நமது கொள்கையின் இரட்டை இலக்காக இருக்கின்றன. இதில், சந்தை நிபந்தனைகளைப் பொறுத்து நமது ஆற்றல் ஆதாரங்களை விரிவுப்படுத்துதல் மற்றும் பொருத்தமான முறையில் பன்முகப்படுத்துதல் அடங்கும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாக எங்கள் எரிசக்தி கொள்முதலை விரிவுபடுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம். இது கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருகின்றன.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்தப் போவதாக டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தாரா? இல்லையா? என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார். ரஷியாவின் எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து டிரம்பை அறிவிக்க அனுமதிக்கிறார்.” என்று ராகுல் பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory