» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைப்பு : வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை
சனி 1, நவம்பர் 2025 11:09:11 AM (IST)
வணிக சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,754.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பாகுபலி ராக்கெட் : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
புதன் 24, டிசம்பர் 2025 10:41:10 AM (IST)

தங்க நகையின் மதிப்பில் 60 முதல் 65% வரை மட்டுமே கடன்: ரிசர்வ் வங்கி அதிரடி!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 11:24:15 AM (IST)

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்
திங்கள் 22, டிசம்பர் 2025 12:35:30 PM (IST)

நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு : டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:33:37 AM (IST)

அணுசக்தித் துறையில் தனியார்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:17:30 AM (IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

