» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பத்மநாபசாமி கோவிலில் 107 கிராம் தங்கம் மாயம் : 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை...!

ஞாயிறு 9, நவம்பர் 2025 9:24:57 AM (IST)

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 107 கிராம் தங்க கம்பி மாயமாகி மீண்டும் கிடைத்த விவகாரத்தில் கோவில் மேலாளர் உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்ட பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த கோவிலுக்கு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த மே மாதம் பத்மநாபசாமி கோவில் கதவுகளில் தங்கத்தகடுகள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக தங்க கம்பிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போது பாதுகாப்பு அறையில் உள்ள தங்கத்தை கணக்கீடு செய்தபோது அதில் 107 கிராம் தங்கம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கதவுகளில் தங்க தகடு பதிக்கும் பணி நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டிருந்த மணல் குவியலில் இருந்து மாயமான தங்க கம்பி மீட்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் கடந்த மே மாதம் 11-ந் தேதி அறிவித்தது. இருப்பினும் தங்கத்தை திருடி விட்டு அது வெளியே தெரிந்ததும் தங்கத்தை விட்டு சென்றவர்கள் யார்? என்பதை கண்டறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக்கோரி திருவனந்தபுரம் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து தங்கம் உள்ளிட்டவைகளை நிர்வகிக்கும் மேலாளர், துணை மேலாளர், 2 ஊழியர்கள் மற்றும் 2 தொழிலாளர்கள் உள்பட 6 பேரிடம் அவர்களின் அனுமதியுடன் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory