» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்: போலீசார் தகவல்
செவ்வாய் 11, நவம்பர் 2025 12:07:45 PM (IST)
டெல்லியில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, போஸ்டர்களை ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீல் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.
இது தவிர வாக்கி டாக்கிகள், எலெக்ட்ரிக் வயர்கள், பேட்டரிகள், மெட்டல் ஷீட்கள், வெடிகுண்டு தயாரிப்பை விளக்கும் குறிப்பேடுகள் ஆகியவையும் சிக்கின. இந்நிலையில் நேற்று தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், 12 பேர் உயிரிழந்தனர்; பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில், பரிதாபாத்தில் இருந்து செயல்பட்டு வந்த தனது கூட்டாளிகள் போலீசாரிடம் சிக்கியதால், பயங்கரவாத அமைப்பை சேர்ந்த புல்வாமா டாக்டர் உமர் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியது டெல்லி போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பயங்கரவாதி உமர் வீட்டில் இருந்து செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து டெல்லி போலீசார் கூறியதாவது: இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று தெரிகிறது. விசாரணையில் சந்தேக நபரின் நோக்கம் தெரியவந்துள்ளது.
பரிதாபாத்தில் பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டது தெரிந்தவுடன் அவர் தற்கொலைத் தாக்குதலைத் திட்டமிட்டார். குண்டுவெடிப்புக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைக் கண்டறிய அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடரலாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 11, நவம்பர் 2025 5:02:51 PM (IST)

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது!
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:45:24 AM (IST)

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறி 10 பேர் பலி; நாடு முழுவதும் உஷார்!
செவ்வாய் 11, நவம்பர் 2025 8:06:38 AM (IST)

அமெரிக்கா, நம்பத் தகுந்த நாடு அல்ல: எங்கே போனது மோடி - டிரம்ப் நட்பு? ரகுராம் ராஜன் கேள்வி!
திங்கள் 10, நவம்பர் 2025 5:12:29 PM (IST)

உடல் உறுப்புகளை தானத்திற்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டம்: டாக்டர்கள் சாதனை!
திங்கள் 10, நவம்பர் 2025 3:29:53 PM (IST)

எஸ்ஐஆர் படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திங்கள் 10, நவம்பர் 2025 10:30:36 AM (IST)




